இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
'எடிஸ் எஜிப்டே' எனப்படும் பெண் கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய முறையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அதில் முக்கியமானது கொசுக்களின் மரபனு மாற்றம் செய்யும் முறை.மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுவின் மூலம், பெண் கொசுக்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடியும்.
கொசுவின் 'டி.என்.ஏ.,'வில் குறிப்பிட்ட ஜீனை கண்டறிந்து அவற்றின் மரபை மாற்றுகிறோம். எந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதோ, அங்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களை பறக்கவிட வேண்டும். இதன் மூலம், இனப்பெருக்கத்தின் போது, பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் வலிமையற்றதாகவும், கடிக்கும் திறன் குறைந்ததாகவும் இருக்கும் இதன் மூலம் கொசுக்களின் சந்ததியை கட்டுப்படுத்தலாம், நோய் பரவுவதையும் தடுக்கலாம்.
சமீபத்தில், இந்த முறையில் மலேசியாவில் , மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2,000 ஆண் கொசுக்கள், கொசுக்கள் அதிகமுள்ள பகுதியில் பறக்கவிடப்பட்டன. அங்கே இதற்கான அனுமதி கிடைத்து விட்டது. இந்தியாவில் தற்போது ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறோம். ஆராய்ச்சிக்கு பின், அவற்றை செயல்படுத்துவது, அரசு அனுமதியுடன் இயற்கை சூழ்நிலையோடு வாழ செய்வது என்கிற நிலைகள் உள்ளன.
1 கருத்துக்கள்:
thanks for sharing. //சமீபத்தில், இந்த முறையில் மலேசியாவில் , மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2,000 ஆண் கொசுக்கள், கொசுக்கள் அதிகமுள்ள பகுதியில் பறக்கவிடப்பட்டன. அங்கே இதற்கான அனுமதி கிடைத்து விட்டது. இந்தியாவில் தற்போது ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறோம். ஆராய்ச்சிக்கு பின், அவற்றை செயல்படுத்துவது, அரசு அனுமதியுடன் இயற்கை சூழ்நிலையோடு வாழ செய்வது என்கிற நிலைகள் உள்ளன.//
soon come here . vaalththukal pakirnthamaikku
Post a Comment