இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
விண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களிலிருந்து கட்டடங்களைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புக் கருவி அல்லது சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்த பெருமை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களையே சாரும்.ஆனால் அவருக்கும் முன்னால் நமது அரசர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பிரமாண்ட கோபுரங்கள் கட்டினர். அதை இடியிலிருந்து காக்க கலசங்களை வைத்தனர், அதுவே அந்த கோயில்களுக்கு இடிதாங்கியாக வேலை செய்து இருக்கிறது. கோவிலை சுற்றி குடி இருந்தவர்களும் இடி அபாயத்திலிருந்து தப்பி இருந்து இருக்கின்றனர். அதன்படி தான் 'கோயில் இல்லாத நகரங்களில் குடியிருக்க கூடாது' என்றபடி ஒரு பழமொழியையும் வைத்தனர் நமது முன்னோர்கள்.
அதற்காகவே கும்பாவிஷேகமும் நடத்தினர் இப்படி ஒரு அறிவியல் முன்னோடியாக திகழ்ந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.
கோவில் கர்ப்ப க்ரகத்தில் ஒரு அதிர்வு இருக்கிறதாம், அதை நிலைப்பெற செய்யவே அபிஷேக ஆராதனைகளும், ஸ்லோக உச்சரிப்புகளும் நடக்கிறதாம். இதனால் நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறதாம்.
2 கருத்துக்கள்:
அறிவியலில் மட்டுமல்ல. கணிதத்திலும் சிறந்த அறிவைப் பெற்றிருந்தனர். பார்க்க:http://pearlkings.blogspot.com/2011/06/blog-post_16.html
பகிர்வுக்கு நன்றி
Post a Comment