Saturday, October 16, 2010

தமிழ் இணைய நூலகம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     நம் முன்னோர்கள் எவ்வளவு வீரம், செறிவு, கலை நுனுக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை சரித்திர பின்னனியோடு அறிய வேண்டியது மிக மிக அவசியம்.  அப்படி அமரர் கல்கி எழுதிய அமர காவியமான, 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற வரலாற்று புதினங்களை வாசிக்கும் போது,  நாமும் அப்போது வாழ்ந்திருக்க கூடாதா என்ற ஆசைகள் கூட எழும்.  வாசித்து எத்தனை நாட்கள் ஆயினும் சரி, அந்த கதாபாத்திரங்களும், ஒவ்வொரு வரிகளும் என்றும் நம் கண் முன்னே நினைவில் நிற்கும்.   
     'பொன்னியின் செல்வன்' காவியத்தில் ராஜராஜசோழர் பிறந்தது முதல் அவர் அரியணையில் ஏறியது வரை நடநதவற்றை நன்றாக படைத்திருப்பார் அமரர்.  அதில் வரும் இந்த பாடலை யாரும் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

     இந்த புதினத்தில் பூங்குழலி பாடுவதாக அமைந்த இந்த பாடலும் என்றும் முடியாத வரிகள்.  இதில் வரும் ஒவ்வொரு உவமைகளுமே  முத்துக்கள் தான்.   
     மற்றொரு வரலாற்று புதினமான 'சிவகாமியின் சபதம்' பல்லவர்களின் பொற்காலமான மகேந்திரவர் மற்றும் நரசிம்மவர்மர் ஆட்சியில் நடந்தது பற்றியது.
      ஓர் இணையத்தில் அமரர் எழுதிய 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்'உட்பட பிற நூலகளும் மற்றும் பல தமிழ் நூல்கள்  இலவசமாக வாசிக்க கிடைப்பதை அண்மையில் அறிந்தேன்.  இந்த இணையத்தில் கல்கி, பாரதியார், பாரதிதாசன், சாவி, விவேகனானந்தர், அண்ணா, புதுமைப்பித்தன் மற்றும் பலர் எழுதிய நூல்களும்,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,ஐம்பெரும்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் மற்றும் பல பைந்தமிழ் காப்பியங்களும் வாசிக்க கிடைக்கிறது.  ஒவ்வொரு தமிழ் ஆர்வலரும் விரும்பும் இணையதளமாக இது இருக்கும். 
     இந்த இணையதளத்தை கண்டிப்பாக உங்கள் BOOKMARK-ஆக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.  நிச்சயமாக பயன்படும்.  இந்த இணையதளத்திற்கு செல்ல, இந்த சுட்டியை சொடுக்குங்கள் http://www.chennailibrary.com/  நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து மகிழுங்கள்.

0 கருத்துக்கள்:

Post a Comment