Saturday, November 27, 2010

இணைய வீடியோக்களை பதிவிறக்கும் பல வழிகள்

     இணையதளத்தில்  நாம் வீடியோக்களை YouTube, Google Video, MetaCafe, DailyMotion, Veoh, Break,  போன்ற தளங்களில் பார்த்து ரசிப்போம்.  இந்த தளங்களில் கண்ட வீடியோக்களை பதிவிறக்கி, POWER POINT போன்றவற்றில் சேர்த்தால் SLIDE நன்றாக இருக்குமே என்று நினைப்போம்.  அவற்றை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.


     இரு முறைகளில் இணைய வீடியோக்களை பதிவிறக்களாம்.
ஒன்று, அதற்கேன ஒரு  VIDEO DOWNLOADER SOFTWARE பயன்படுத்தி, மற்றொன்று ONLINE  VIDEO DOWNLOADER-ஐ பயன்படுத்தி.

     இந்த பதிவில், இதற்காக பயன்படுத்தும் அந்த உபயோகப்படுத்தும்  மென்பொருட்களைப் பற்றியும், ONLINE VIDEO DOWNLOADER-களைப் பற்றியும் பார்ப்போம்.

     நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் காணும் வீடியோக்களின் URL-ஐ COPY செய்து இவற்றில் பயன்படுத்தி பதிவிறக்க வேண்டியது தான்.


இலவச VIDEO DOWNLOADER மென்பொருள்கள்:

     இந்த மென்பொருள்களில் நீங்கள் அந்த வீடியோ URL-ஐ கொடுத்து உங்களுக்கு வேண்டிய FORMAT SET செய்தால் போதும்.  கீழ்க்கானும் சுட்டிகளை பயன்படுத்தி அந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

Ares Tube 
KeepV  
VDownloader 
Orbit Downloader


YouTubeGrabber

VideoDownloader  (FIREFOX ADDON)



இலவச ONLINE VIDEO DOWNLOADER SITE:

கீழ்க்கானும் IMAGE-களை பயன்படுத்தி அந்ததந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்.

 



 
 

 

 


Friday, November 26, 2010

WINDOWS EXPLORERல் BACKGROUND SET செய்வது எப்படி

     WINDOWS EXPLORER(FOLDER)-ல் BACKGROUND வெள்ளை COLOUR-ல பார்த்து பார்த்து BORE அடிச்சி போயிடுச்சா.  அங்கு வேற எதனா நமக்கு பிடித்த IMAGE வைத்தால் நல்லா இருக்குமே என்று நீங்கள் நினைக்கிறீர்களா..  அதை எப்படி மேற்கொள்வது என்று, இன்று பார்ப்போம்.

         முதலில் ஒரு NOTEPAD OPEN செய்து கொள்ளுங்கள்.  அதில் கீழ் உள்ள வரிகளை PASTE செய்யுங்கள்.

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image='PASTE PATH OF THE IMAGE HERE'

     இதில் 'PASTE PATH OF THE IMAGE HERE' என்ற இடத்தில், உங்கள் IMAGEன் LOCATION-ஐ PASTE செய்யுங்கள். HIGH RESOLUTION இருக்கும் IMAGE-ஆக தேர்வு செய்து கொள்ளுங்கள்.

     உதாரணத்துக்கு,  உங்கள் IMAGE-ஆனது 'I:\Documents and Settings\PRS\Desktop\Beautiful_pink_tulips_-_hd_wallpaper_hd_wallpaper.jpg' என்ற LOCATION-ல் இருந்தால், அந்த LOCATION-ஐ PASTE செய்யுங்கள். இதில் SINGLE QUOTATION-ஐ போடலாம், போடாமலும் விட்டு விடலாம்.
 
     பிறகு, அந்த  NOTEPAD FILE-ஐ desktop.ini என்று SAVE செய்யுங்கள்.
 
     உங்களுக்கு எந்த இடத்தில்(FOLDER-ல்) BACKGROUND வேண்டுமோ, அங்கு அதை SAVE(paste) செய்து வைத்துக் கொள்ளுங்கள். 
     சென்ற பதிவில் நான் சொன்னது போல், SYSTEM TASK PANE-ஐ REMOVE விட்டு செய்து இதை மேற்கொள்ளுங்கள்.

TASK PANE-ஐ நீக்க

     நாம்  MY COMPUTER ICON(EXPLORER)-ஐ click செய்து open செய்தால், வரும் windowவில் நாம் வைத்துள்ள driveகளையும், மற்றும் சிலவற்றை காட்டும்.  அந்த windowவுக்கு இடது புறம் common tasks( system task, other places & other details) என்ற Task Pane இருக்கும்.  நாம் அதை விரும்பவில்லை என்றால் அதை நீக்கி விடலாம்.  அதை எப்படி நீக்கலாம் என்று பார்ப்போம்.

COMMON TASK PANE-உடன்

COMMON TASKPANE இல்லாமல்
 இதை மேற்கொள்ள,
  • முதலில் menu barக்கு சென்று tools-ஐ click செய்யுங்கள்.
  • அதில் வரும் folder option-ஐ தேர்வு செய்யுங்கள்
  • பிறகு கிடைக்கும் dialogue box-இல், general tab-ல் task என்ற பிரிவில், 'use windows classic folders' என்பதை select செய்து 'apply' செய்து, 'ok' click செய்து விடுங்கள், 
அவ்வளவுதான்., பார்க்க நல்லா இருக்குல...


    

Saturday, November 20, 2010

காட்டுக்கு சுற்றுலா போகறீங்களா

     காடுகளுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், எப்போது போகலாம், அங்கே செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்களை பற்றி, அண்மையில் தினமலர் நாளிதழில் படித்தேன்.  அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


எப்போது போகலாம்:
     கோடைக்காலம் தான் பயணம் போக உகந்த காலம்.  மழை காலத்தில் செடி, கொடிகள், மரங்கள் தழைத்து வளர்ந்து நிற்கும் என்பதால், மிருகங்கள் நாம் அவ்வளவு சுலபமாக பார்த்து விட முடியாது.  ஆனால், கோடை காலத்தில் மிருகங்கள் நம் பார்வைக்கு மிக சுலபமாக அகப்படும்.  சூரிய உதயத்தின் போது, அஸ்தமனத்தின் போது விலங்குகள் இரைதேட கிளம்பும் காட்சி அவ்வளவு அழகானது.


காடு பயணத்தின் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:
  • மரங்களின் அடர்த்தி அதிகம் என்பதால், புழுக்கம், அதிகமாக இருக்கும், பருத்தி உடைகள் பயணத்திற்கு ஏற்றது.
  • கறுப்பு, சாம்பல், பச்சை நிற உடைகள் நல்லது.  வெள்ளை மற்றும் ஊத நிற உடைகள் விலங்குகளை கவர்ந்திழுக்கும் என்பதால் இந்த நிறங்களை தவிர்த்து விடுவது நல்லது.
  • தொப்பி மற்றும் தரமான ஷுக்கள் அவசியம்.
  • வனத்துறை உதவியுடன் நல்ல வழிகாட்டியை துணைக்கு அழைத்துச் செல்வது நலம்.

காட்டு பயணத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள்:
  • புகை பிடிக்க கூடாது.
  • வாகனங்களின் பயணம் செய்யும்போது தேவையில்லாத ஹாரன் வேண்டாம்.
  • வாகனங்களை வனச்சாலையின் ஓரம் நிறுத்தி இறங்கி நிற்பது ஆபத்தானது.
  • எந்த சூழலிலும் இன்ஜினை அணைத்துவிட வேண்டாம்.
  • மொபைல் சப்தம், அதிகமான பாட்டு சப்தம் மிருகங்களை எரிச்சல் பட வைக்கும்.  நாம் அவர்களின் வீட்டு விருந்தாளிகள் என்பதை நினைவு கொள்ள வேண்டியது.

   கான்க்ரீட் காட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி அலுத்துப் போச்சுனு நினைக்கறவங்க,  அப்படியே பசுமைக் காட்டுக்கு போய் வாங்க.

Sunday, November 7, 2010

புதிய ஜோதிடர்

   
     எப்பா, பதிவிட்டே ரொம்ப நாள் ஆயிடுச்சுல...?  இந்த செமஸ்டர் எக்ஸாம்  வேற வந்து தொலச்சிடுச்சு, பதிவிடவே முடியல.  நல்ல வேல 'ஜல்' புயல் வந்து நாளைக்கு ஒரு நாள் லீவ் வாங்கி கொடுத்துடுச்சு,  நல்லது..


  
     நம்ம ஜோதிட சிகாமணி 2010 FIFA  WORLD CUP முடிவ சரியா முன்னவே கணிச்சு சொன்ன "பால் ஆக்டோபுஸ்" போன மாசம் நவம்பர்  26 ஆம் தேதி இயற்கை எய்திட்டாராம், அவருக்கு பதிலா புதுசா ஒரு ஆக்டோபுஸ் வாங்கி அருங்காட்சியம்ல வச்சி இருக்காங்கலாம். அவருக்கும் அதே பேர் பால்னு தான் வச்சி இருக்காங்கலாம்.  இனிமே அவருக்கு பயிற்சி குடுக்க போறாங்கலாம். அவர மாதிரி இவர் ஜோதிடம் கணிப்பாரானு பொறுத்து இருந்து பார்ப்போம்.

     நம்ம பழைய பால் கணிப்ப கொஞ்சம் பாருங்களேன்.

UEFA Euro 2008

Teams Stage Date Prediction Result Outcome
Germany vs Poland Group stage 8 June Germany 2–0 Correct
 Croatia vs Germany Group stage 12 June Germany 2–1 Incorrect
 Austria vs Germany Group stage 16 June Germany 0–1 Correct
 Portugal vs Germany Quarter-finals 19 June Germany 2–3 Correct
 Germany vs Turkey Semi-finals 25 June Germany 3–2 Correct
 Germany vs Spain Final 29 June Germany 0–1 Incorrect

2010 FIFA World Cup

Teams Stage Date Prediction Result Outcome
Germany vs Australia Group stage 13 June Germany 4–0 Correct
Germany vs Serbia  Group stage 18 June Serbia 0–1 Correct
 Ghana vs Germany  Group stage 23 June Germany 0–1 Correct
Germany vs England  Round of 16 27 June Germany 4-1 Correct
Argentina vs Germany  Quarter-finals 3 July Germany 0–4 Correct
Germany vs Spain  Semi-finals 7 July Spain 0–1 Correct
Uruguay vs Germany  3rd place play-off 10 July Germany 2–3 Correct
Netherlands vs Spain  Final 11 July Spain 0–1 Correct