இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பறக்க செய்து, அதற்கு மரியாதை செலுத்துவோம். தேசியக் கொடியை எங்கெல்லாம் எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும் என்பது பற்றி சில விதிகள் இருக்கிறது.எங்கு, எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும்:
- சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்.
- முக்கியமாக தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும்.
- ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடித்துச் செல்ல வேண்டும்.
- தேசியத் திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளில், கார்களில், தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
- மற்ற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளை பறக்கவிட வேண்டும்.
- அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர் அலுவகங்களிலும், பயன்படுத்தும் கார்களிலும் கொடி கட்டாயம் பறக்க விடவேண்டும்.
- மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரது காரிலும் கொடி பறக்க வேண்டும்.
- எல்லைப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொடியை பறக்க விடலாம்.
- தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு போன்ற தேசிய துக்க சம்பவங்களுக்கு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்க விட வேண்டும்.
- கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
- ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.
- கொடியை ஜன்னல் திரையாகவோ, மேஜை விரிப்பாகவோ பயன்படுத்தக் கூடாது.
3 கருத்துக்கள்:
ஆனால் தங்கள் கட்சியின் கொடியாக பயன்படுத்தலாம்தானே?!
:)))
ers said...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்
--------------
நன்றி
நான் எனது வீட்டின் மாடியில் தேசியக்கொடியை பறக்க விடலாமா?
Post a Comment