இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் எல்லோரும் இறக்கை உடைய மின்விசிறியை தான் பார்த்து இருப்போம். ஆனால், இறக்கையே இல்லாத மின்விசிறியையும் கண்டுபிடித்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் தான் James Dyson. அந்த கண்டுப்பிடிப்பின் பெயர் தான் Dyson Air Multiplier™ fan.இந்த மின்விசிறி மற்ற மின்விசிறி காட்டிலும் எப்படி வித்தியாசமாக வேலை செய்கிறது என்று கேட்கிறீர்களா.? மேலும் படியுங்கள்.
இது Air Multiplier™ முறையை பயன்படுத்தி காற்றை இழுத்து, 15 முதல் 18 முறை அதிகமாக்கி, தொடர்ச்சியான காற்றை கொடுக்கிறதாம்.
இந்த மின்விசிறியில் blades, grille என்று எதுவுமே இல்லாததால் சுலபமாக சுத்தம் செய்யலாம் மற்றும் பாதுகாப்பானது. மேலும் இது தொடர்ச்சியான காற்றைத் தருகிறது.
முற்றிலும் பாதுகாப்பானது.
நாம் உபயோகபடுத்தும் மின்விசிறியில் வரும் தொடர்ச்சியற்ற காற்று முறை.
Dyson Air Multiplier மின்விசிறியில் வரும் தொடச்சியான காற்று முறை.
சுத்தம் செய்வது எளிது
மற்ற மின்விசிறிகளை காட்டிலும் இந்த மின்விசிறிகளில் உள்ள பயன்களை அறிய இந்த கோப்பை பதிவிறக்குங்கள், இந்த சுட்டியின் வழியே http://media.dyson.com/downloads/US/fan/benefits.pdf
James Dyson அவர்களே இந்த மின்விசிறியை பற்றி கூறுவதை கீழே வீடியோவில் கானுங்கள். இந்த வீடியோ கோப்பை youtube-ல் காண http://www.youtube.com/watch?v=8LAHqRmxn-4
இதை நிருபிக்க அவர்கள் காட்டிய ஆராச்சி video கோப்பை கீழே இருக்கிறது. அதை இயக்கி காணுங்கள். சற்று வேடிக்கையாகவும் ஆச்சரியாமாகவும் இருக்கிறது. இந்த வீடியோ கோப்பை youtube-ல் காண http://www.youtube.com/watch?v=BNhCUZ-BRMA
இதைப் பற்றி மேலும் வீடியோக்களை காண, இங்கே சொடுக்குங்கள் http://www.youtube.com/results?search_query=dyson+bladeless+fan+air+multiplier&aq=1
என்ன ஒரு அற்புத கண்டுபிடிப்பு. இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்புப்படி ஒரு Table Fan 10 inch-ன் விலை-$299.99..
இந்த post-ஐ pdf கோப்பாக பதிவிறக்க
4 கருத்துக்கள்:
:-)))))))
சரவணன் சார் , அந்த வேர்டு வெரிபிகேசன எடுத்திடுங்க
நன்றி. வேர்டு வெரிபிகேசன் எடுத்துட்டேன்
அருமையான புதுமையான தகவல் நண்பரே... ஃபேனுக்கு இறக்கை இருந்துச்சா அது என்ன பறவையான்னு நம்ம பேரப்புள்ளைங்கள்லாம்..நம்மல பாத்து சிரிப்பாங்க போல இருக்கே....
Post a Comment