Saturday, October 16, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
    சமீபத்தில் லஞ்சத்தை ஒழிக்க உச்ச நீதி மன்ற நீதிபதி  ஒரு வழி கூறி இருக்கிறார். அவர் கூரியதாவது, 'அரசு துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை'.  குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன.  எனவே,  'அரசு அலுவகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம்', 'அதை சட்டமும் ஆக்கலாம்' என்பதே லஞ்சத்தை ஒழிக்க அவர் கூரியவழி.  மேலும் அவர் கூரியதாவது, இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர்.  அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழையாக உள்ளனர்.  அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது என்று அவர் கூறி இருக்கிறார்.
     இப்படி ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறி இருப்பது, சற்று வியப்பாக தான் இருக்கிறது. மற்ற நாடுகளில் வேலை செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்குகின்றனர்.  அனால் நமது நாட்டிலோ வேலை செய்வதற்கே லஞ்சம் என்ற பெயரில் பிச்சை வாங்குகின்றனர்.  அவர்கள் வேலை செயவதற்கு தான் மாதா மாதம் சம்பளம் வாங்குகின்றரே, பின்பு எதற்கு இந்த சட்டம் ஆக்கப்பட வேண்டிய 'லஞ்சத் தொகை நிர்ணயம் செய்யும் வழி.

     இப்படி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழக அரசுக்கே அதிக வருவது இதனால் தான்.  அது தான் 'டாஸ்மாக்'.  இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..? சுமார் 'பதினான்கு ஆயிரம் கோடி(14,000 கோடி).  இங்கேயும் ஒரு குளறுபடி நடக்கிறது. ஒவ்வொரு சரக்குக்கும் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிமகன்களிடம் வசூல் செய்து(குளிர்ச்சிக்கு என்று கூறி), டாஸ்மாக் கடைகாரர்களின் பையில் போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மொத்தமாய் கிடைக்கும் வருவாயே கோடி கணக்காம்.   
     முன்னர் அண்ணா ஆட்சியில் இருந்த போது மதுக்கடையை அரசு எற்று நடத்தினால் அரசுக்கு நிறைய வருவாய் கிடைக்கும் என்று கலைஞர் கூறினாராம். அண்ணா அதற்கு 'விழியை இழந்து சித்திரம் வாங்குவதா?', அப்படி வரும் வருமானம் தேவையே இல்லை என்று அவர் கூறினாராம்.  ஆனால் என்று, அரசு நடப்பதே மணல் மூலமூம் டாஸ்மாக் மூலமும் தான் என்றால் பாருங்கள்.  எங்கே செல்கிறது நமது நாடு என்று பாருங்கள்.

2 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

நீதிபதியின் கருத்து சரிதான். லஞ்சமாக இல்லாமல் கட்டணமாக செலுத்தி செய்யலாம்.

ச.சரவணன், said...

கட்டணமும் பெற்றுக்கொண்டு லஞ்சமும் பெறுவதும் தொடர்ந்தால்

Post a Comment