Tuesday, October 19, 2010

மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்

     'எடிஸ் எஜிப்டே' எனப்படும் பெண் கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.   இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.  எனவே கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய முறையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.  அதில் முக்கியமானது கொசுக்களின் மரபனு மாற்றம் செய்யும் முறை.



     மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுவின் மூலம், பெண் கொசுக்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடியும்.



     கொசுவின் 'டி.என்.ஏ.,'வில் குறிப்பிட்ட ஜீனை கண்டறிந்து அவற்றின் மரபை மாற்றுகிறோம்.  எந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதோ, அங்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களை பறக்கவிட வேண்டும்.  இதன் மூலம், இனப்பெருக்கத்தின் போது, பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் வலிமையற்றதாகவும், கடிக்கும் திறன் குறைந்ததாகவும் இருக்கும்  இதன் மூலம் கொசுக்களின் சந்ததியை கட்டுப்படுத்தலாம், நோய் பரவுவதையும் தடுக்கலாம்.

     சமீபத்தில், இந்த முறையில் மலேசியாவில் , மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2,000 ஆண் கொசுக்கள், கொசுக்கள் அதிகமுள்ள பகுதியில் பறக்கவிடப்பட்டன.  அங்கே இதற்கான அனுமதி கிடைத்து விட்டது.  இந்தியாவில் தற்போது ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறோம்.  ஆராய்ச்சிக்கு பின், அவற்றை செயல்படுத்துவது, அரசு அனுமதியுடன் இயற்கை சூழ்நிலையோடு வாழ செய்வது என்கிற நிலைகள் உள்ளன.

Monday, October 18, 2010

ENGLISH - தமிழ் இணைய அகராதி


      இணையத்தில் ONLINE ENGLISH - தமிழ் அகராதி வழங்கும் சில இணையதளங்கள் இருக்கின்றன.

      அவைகள் சில கீழே.,
      http://www.tamildict.com/  இந்த தளத்தில் இல்லாத மேலும் புதிய தமிழ்ச் சொற்கள் உங்களிடம் இருந்தால் அவைளை கூட இந்த தளத்தின் சொல் தேடலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.    உங்கள் புதிய சொற்களைச் சேர்க்க இங்கே அதற்கென சுட்டி(link) இருக்கிறது.

        http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp - இந்த தளத்தில் நீங்கள் ENGLISH சொல்லை கொடுத்தால், உங்களுக்கு தமிழிலும், சிங்கள மொழியிலும் சொற்கள் கிடைக்கிறது.  அந்த சொற்களை நீங்கள் உச்சறிப்பு(pronounce) செய்தும் பார்த்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.

     http://www.dictionary.tamilcube.com/  - இந்த தளத்தில் Modern Dictionary Toolbar கொடுக்கிறார்கள்.  அதை நீங்கள் உங்கள் browser-ல் பதிவதன் மூலம் நீங்கள் ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகம் பேசப்படுகின்ற மொழிகளாகிய தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலயாளம், மராதி, சமஸ்க்ருதம், குஜராதி, உருது, மலாய், இந்தோனேசியன், சைனீஸ், அரபிக், தாய், ஜேபனீஸ் மொழிகளின் அகராதிகளையும் மற்றும் Online திருக்குறள் தேடுதலையும் பெறலாம்.

     மேற்கண்ட இணையதள்ங்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை பயன்படுத்தி மகிழுங்கள்.
     மேலும், 5500 வார்த்தைகள் அடங்கிய ENGLISH - தமிழ் அகராதியை PDF கோப்பாக பதிவிறக்க கீழே உள்ள சுட்டிகளை(link) சொடுக்கவும்(click).

இறக்கையே இல்லாத மின்விசிறி

     நாம் எல்லோரும் இறக்கை உடைய மின்விசிறியை தான் பார்த்து இருப்போம். ஆனால், இறக்கையே இல்லாத மின்விசிறியையும் கண்டுபிடித்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் தான் James Dyson. அந்த கண்டுப்பிடிப்பின் பெயர் தான் Dyson Air Multiplier™ fan.


     இந்த மின்விசிறி மற்ற மின்விசிறி காட்டிலும் எப்படி வித்தியாசமாக வேலை செய்கிறது என்று கேட்கிறீர்களா.?  மேலும் படியுங்கள்.
     இது Air Multiplier™ முறையை பயன்படுத்தி காற்றை இழுத்து, 15 முதல் 18 முறை அதிகமாக்கி, தொடர்ச்சியான காற்றை கொடுக்கிறதாம்.
 
     இந்த மின்விசிறியில் blades, grille என்று எதுவுமே இல்லாததால் சுலபமாக சுத்தம் செய்யலாம் மற்றும் பாதுகாப்பானது.  மேலும் இது தொடர்ச்சியான காற்றைத் தருகிறது.

முற்றிலும் பாதுகாப்பானது.


     நாம் உபயோகபடுத்தும் மின்விசிறியில் வரும் தொடர்ச்சியற்ற காற்று முறை.



     Dyson Air Multiplier மின்விசிறியில் வரும் தொடச்சியான காற்று முறை.


சுத்தம் செய்வது எளிது

     மற்ற மின்விசிறிகளை காட்டிலும் இந்த மின்விசிறிகளில் உள்ள பயன்களை அறிய இந்த கோப்பை பதிவிறக்குங்கள், இந்த சுட்டியின் வழியே http://media.dyson.com/downloads/US/fan/benefits.pdf
    
    James Dyson அவர்களே இந்த மின்விசிறியை பற்றி கூறுவதை கீழே வீடியோவில் கானுங்கள். இந்த வீடியோ கோப்பை youtube-ல் காண http://www.youtube.com/watch?v=8LAHqRmxn-4

     இதை நிருபிக்க அவர்கள் காட்டிய ஆராச்சி video கோப்பை கீழே இருக்கிறது.  அதை இயக்கி காணுங்கள்.  சற்று வேடிக்கையாகவும் ஆச்சரியாமாகவும் இருக்கிறது. இந்த வீடியோ கோப்பை youtube-ல் காண http://www.youtube.com/watch?v=BNhCUZ-BRMA



     இதைப் பற்றி மேலும் வீடியோக்களை காண, இங்கே சொடுக்குங்கள் http://www.youtube.com/results?search_query=dyson+bladeless+fan+air+multiplier&aq=1
     என்ன ஒரு அற்புத கண்டுபிடிப்பு.  இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்புப்படி ஒரு Table Fan 10 inch-ன் விலை-$299.99..
     இந்த post-ஐ pdf கோப்பாக பதிவிறக்க

Sunday, October 17, 2010

சுவாமி விவேகானந்தரின் குரல்

  
     சுவாமி விவேகானந்தரின் சிம்ம  குரலையும், அவர், அன்று(சிகாகோவில்) எப்படி உரையாற்றி இருப்பார் என்று கேட்க விருப்பமா..?  சிறிய ஒலி கோப்பாக ஆக கிடைத்திருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.     இந்த ஒலிக் கோப்பை பதிவிறக்க கீழ்காணும் சுட்டிகளை சொடுக்குங்கள்.
http://www.4shared.com/audio/dbS4tV6U/Swami_Vivekananda_1893_Speech_.html
http://www.4shared.com/audio/gry6xk7F/welcome_address_vivekananda.html
http://www.4shared.com/audio/5pAK2QLN/Swami_Vivekananda_1893_Speech_.html

தமிழ் எழுத்துரு e-kalappai

     நல்ல தமிழ் எழுத்துரு ekalappai-anjal மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள் http://thamizha.com/system/files/ekalappai20b_anjal_0.exe

     இதை பயன்படுத்தும் முறைமையை பதிவிறக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள் http://www.4shared.com/document/1ObOXPww/e_kalappai_tml_type_rule.html

தேசியக்கொடி விதிகள்

     சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பறக்க செய்து, அதற்கு மரியாதை செலுத்துவோம்.  தேசியக் கொடியை எங்கெல்லாம் எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும் என்பது பற்றி சில விதிகள் இருக்கிறது.


எங்கு, எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும்:

  • சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்.
  • முக்கியமாக தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும். 
  • ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடித்துச் செல்ல வேண்டும்.
  • தேசியத் திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளில், கார்களில், தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
  • மற்ற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளை பறக்கவிட வேண்டும்.
  • அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர் அலுவகங்களிலும், பயன்படுத்தும் கார்களிலும் கொடி கட்டாயம் பறக்க விடவேண்டும்.
  • மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரது காரிலும் கொடி பறக்க வேண்டும்.
  • எல்லைப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொடியை பறக்க விடலாம்.
துக்க நாளில்:
  • தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு போன்ற தேசிய துக்க சம்பவங்களுக்கு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்க விட வேண்டும்.
செய்ய கூடாதது:
  • கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
  • ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.
  • கொடியை ஜன்னல் திரையாகவோ, மேஜை விரிப்பாகவோ பயன்படுத்தக் கூடாது.
PDF கோப்பாக பதிவிறக்க, இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்

இந்திய நாணயம் அச்சிடப்படும் இடங்கள்

     இந்திய நாணயங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற நான்கு முக்கிய நகரங்களில் அச்சிடப்படுகின்றன.  ஒவ்வொரு நகரமும் தன்னுடைய நாணயங்களில் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அடையாளக் குறியாக போடுகின்றன.  இந்த அடையாளக் குறி, ஒவ்வொரு நாணயத்திலும் அது தயாரிக்கப்பட்ட வருடத்தின் கீழ் இருக்கும்.

  உதாரணமாக,
     டெல்லி                -   சின்னப்புள்ளி
     மும்பை               -    டைமண்ட்வடிவம்
     ஹைதராபாத்     -    நட்சத்திரக் குறி  
     கொல்கத்தா        -    குறி எதுவும் இல்லை



 

தமிழன் அறிவியல் முன்னோடி

     விண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களிலிருந்து கட்டடங்களைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புக் கருவி அல்லது சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்த பெருமை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களையே சாரும்.
     ஆனால் அவருக்கும் முன்னால் நமது அரசர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பிரமாண்ட கோபுரங்கள் கட்டினர்.  அதை இடியிலிருந்து காக்க கலசங்களை வைத்தனர், அதுவே அந்த கோயில்களுக்கு இடிதாங்கியாக வேலை செய்து இருக்கிறது.  கோவிலை சுற்றி  குடி இருந்தவர்களும் இடி அபாயத்திலிருந்து தப்பி இருந்து இருக்கின்றனர். அதன்படி தான் 'கோயில் இல்லாத நகரங்களில் குடியிருக்க கூடாது' என்றபடி ஒரு பழமொழியையும் வைத்தனர் நமது முன்னோர்கள்.   
     அதற்காகவே கும்பாவிஷேகமும் நடத்தினர்  இப்படி ஒரு அறிவியல் முன்னோடியாக திகழ்ந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.
     கோவில் கர்ப்ப க்ரகத்தில் ஒரு அதிர்வு இருக்கிறதாம், அதை நிலைப்பெற செய்யவே அபிஷேக ஆராதனைகளும், ஸ்லோக உச்சரிப்புகளும் நடக்கிறதாம்.  இதனால் நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறதாம்.
    




Saturday, October 16, 2010

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்



















     நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால், நீ பலவீனமாக இருப்பாய். உன்னை வலிமை உள்ளவன் என்று நினைத்தால் வலிமை உள்ளவனாக நீ இருப்பாய்.

     ஒரு போதும் ‘இல்லை’ என்று எதிர்மறையாக சொல்லாதே. ‘என்னால் முடியாது’ என்று ஒருபோதும் சொல்லாதே. ஏனென்றால் உன் திறமைக்கு எல்லை கிடையாது. உன்னுடைய இயற்கைத் திறனோடு காலத்தையும் இடத்தையும் ஒப்பிட்டால் அவை ஒன்றுமே இல்லை. நீ எதையும் சாதிக்க முடியும். நீ சர்வ வல்லமை உள்ளவன்.

     பலவீனத்தை போக்க விரும்பி அதையே நினைத்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே முடியாது, வலிமையை எண்ணினால் பலவீனம் போய்விடும். உன்னுள் வலிமை ஏற்கனவே இருக்கிறது. அதைப் பயன்படுத்து.

     வலிமை பற்றி சொல்லும்போது மட்டுமே உபநிஷத்திலிருந்து மேற்கோல் சொல்வேன். வேதங்களும் வேதாந்தமும் வலிமை ஒன்றையே வலியுறுத்துகின்றன.

     இந்த ஒரு கேள்விதான் நான் ஒவ்வொருவரிடமும் கேட்பது: “நீ வலிமையுடன் இருக்கிறாயா? வலிமை உடையவனாக இருப்பதை உணர்கிறாயா? ஏனென்றால் உண்மையைக் கடைப்பிடிப்பது தான் வலிமை அளிக்கும். உலகத்து நோய்களுக்கு வலிமைதான் மருந்து.

     வெற்றிபெற வேண்டுமானால் அளவு கடந்த விடாமுயற்சி வேண்டும். உறுதியான மனமும் வேண்டும். விடமுயற்சியுடைய ஆன்மா, ‘நான் சமுத்திரத்தைக் குடித்துத் தீர்ப்பேன்’ என்று சொல்லும். ‘நான் மனம் வைத்தால் மலைகளை கூட நொறுங்க செய்யமுடியும்’ என்று சொல்லும். அப்படிபட்ட ஆற்றலுடன் மனவலியுடன் இருத்தல் வேண்டும். கடினமாக உழை. உன் இலட்சியம் நிறைவேறும்.

     ஒருவன் தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்யாவிட்டால் எதையும் செய்து முடிக்க இயலுமா? செயல் வீரனாகவும், சிங்கம் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் உள்ளவனிடமே செல்வம் சேரும். முயற்சி மேற்கொள்ளும்போது கடந்து போனதை நினைத்து கொண்டிராதே. முன்னே நோக்கு. அளவற்ற ஆற்றல் வேண்டும். அளவற்ற ஆர்வமும் ஊக்கமும் வேண்டும். அளவற்ற தைரியம் வேண்டும். அளவற்ற பொறுமை வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் பெரிய சாதனைகளை புரிய இயலும்.

     யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். உனக்கு சரி என்று படுவதை நீ விடாதே. அப்படி இருந்தால் உலகம் உன் காலடியில் வரும். ‘அவர் சொல்வதை நம்பு. இவர் சொல்வதை நம்பு’ என்று மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் முதலில் நீ உன்னை நம்ப வேண்டும். எல்லா ஆற்றலும் உன்னிடம் உள்ளது. அதை அறிந்து வெளி கொணர். ‘நான் எதையும் சாதிக்க முடியும்’ என்று சொல். பாம்பின் விஷம்கூட என்னை ஒன்றும் பண்ண முடியாது என்று உறுதியாக மறுப்பாயேயானால் விஷம் பலமற்று, பயனற்றுப் போகும்.

     ஒருமுறை நான் வாரணாசிக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரில் ஒரு பக்கம் பெரிய தண்ணீர் தொட்டியும், மறுப்பக்கம் உயரமான சுவரும் இருக்கின்ற வழியில் போய்க் கொண்டிருந்தேன். தரையில் ஏராளமான குரங்குகள் திரிந்தன. அவை முரட்டுதனம் மிக்கவையாக இருந்தன. அவை என்னைத் தெருவழி போகவிடாமல் தடுத்தன. அவை கத்திக் கொண்டு வந்து என் பாதத்தைக் கவ்வ நெருங்கின. அவை என்னை நெருங்கவும் வேகமாக ஓட ஆரம்பித்தேன். அவையும் வேகமாக பின்தொடர்ந்து கடிக்க வந்தன. தப்ப முடியாது என்ற நிலையில் அங்கு எதிர்பட்ட ஒருவர், குரங்குகளை எதிர்த்து நில்லுங்கள்! ஓடாதீர்கள்!” என்று உரக்க சொன்னார். நான் உடனே திரும்பி நின்று குரங்குகளைப் பார்த்துமுறைத்தேன். அவை உடனே பின்வாங்கி ஓடிப்போய் விட்டன. வாழ்க்கைக்கும் இந்த பாடம் உதவும். ஆபத்தை எதிர்கொள். தைரியமாக எதிர்கொள்.

     எதிர்த்து நில், போராடு, பின்வாங்காதே. ஓர் அடிகூட பின் வைக்காதே. என்ன வேண்டுமானாலும் வறட்டும். போராடுவதை நிறுத்தாதே. உலகமே எதிர்த்து வரட்டும். சாவுதானே வரும். வந்தால் என்ன? போராடு. கோழையாக இருப்பதால் எந்த இலாபமும் இல்லை. உலகத்திலுள்ள எல்லாக் கடவுள்களிடமூம் கத்தி பிரார்த்தித்தாய். துன்பம் தீர்ந்ததா? நீ வெற்றி பெற்றவனானால் கடவுள்களும் உனக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்படியிருப்பதால் பிரார்த்தனையால் என்ன பயன்? நீ அளவெல்லை அற்ற ஆன்மா. அப்படியிருக்க நீ அடிமையாவது பொருந்துமா? எழுமின்! விழுமின்! எதிர் நின்று போராடுமின்!

     செயலற்ற சோம்பேறி வாழ்க்கையைவிட சாவு மேல். தோல்வியுற்று வாழ்வதைவிட போர்க் களத்தில் மடிவது மேல்.

     கடலை கடக்க வேண்டுமானால் இரும்பு நெஞ்சம் வேண்டும். மலையைத் துளைத்துச் செல்லக் கூடிய அளவு நீ வலிமையுடையவனாக இருக்கவேண்டும்.

     ஒரு நோக்கம் கொள்ளுங்கள். அதை உங்கள் வாழ்க்கை லட்சியமாக ஆக்குங்கள். அதைப்பற்றியே சிந்தியுங்கள். கனவு காணுங்கள். அந்நோக்கத்தோடு வாழ்க்கை நடத்துங்கள். உங்கள் மூளை, தசைகள், நரம்புகள் இப்படி உடம்பின் எல்லா பாகங்களும் அந்த நோக்கம் அல்லது கருத்து நிரம்பியிருக்கட்டும். மற்ற எண்ணங்களை, நோக்கங்களை விலக்கி வைத்திருங்கள். இது வெற்றி அடைவதற்கு வழி.

     மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அறிவு உண்டாகும். ஏனென்றால் இது ஒன்றுதான் அறிவு வளர்வதற்கு ஒரே வழி. காலணிக்குப் போடும் மந்தமான கருப்புநிற பாலிஷ்கூட ஒருமுகப்பட்டுத் தேய்க்கப்பட்டால், காலணி நல்ல கருப்பு நிறமாகப் பளபளக்கும். சமையல் செய்பவர் ஒருமுகப்பட்டு அப்பணியை செய்வாரேயானால் சிறப்பான மிகவும் ருசியான உணவு தயாரிக்கப்பட்டுவிடும். பணம் சம்பாதிப்பதிலும் கடவுளை வணங்குவதிலும் அல்லது வேறு எதைச் செய்யும்போதும் ஒருமுகப்பட்டு ஈடுபடும் ஆற்றல் அதிகமாக இருப்பின் நீங்கள் செய்வது சிறப்பாக அமையும். இந்த முறை இயற்கையின் கதவுகளைத் திறக்கச் செய்து, ஒளி வெள்ளம் பாய வைத்துவிடும்.

     மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையளவு கிடையாது. ஒருமுகப்படுத்தும் திறன் கூடக் கூட அதிக ஆற்றல் ஓரிடத்தில் குவியும். இதுதான் ரகசியம்.

     இருவரிடையே ஒருமுகப்படுத்தும் ஆற்றலில் உள்ள வித்தியாசம் அந்த இருவருக்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டிவிடும். தாழ்ந்த மனிதனோடு உயர்ந்த மனிதனை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருமுகப்படுத்தும் ஆற்றல்தான் இருவரிடையேயுமுள்ள வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கும்.

     துரதிஷ்டவசமாக, பெரும்பான்மை மனிதர்கள் இலட்சியம் ஏதுமின்றி இருண்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். இலட்சியம் கொண்ட மனிதன் ஓராயிரம் தவறுகள் செய்கிறானென்றால் இலட்சிய, ஏதுமற்றவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்கிறான். ஆகவே இலட்சியம் ஒன்று கொண்டிருப்பது நல்லது.

     உங்கள் எண்ணங்களையும், நீங்கள் பேசும் வார்த்தைகளையும் ஒன்றாக இருக்கும்படி செய்யமுடியுமானால் பேச்சிலும் செயலிலும் ஒன்றாகவே இருங்கள். பணம் உங்கள் காலடியில் வந்து கொட்டும், தண்ணீர் போல.

     மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் ஒருமுகப்பட்டுச் செயல்படும் ஆற்றல் பொருத்ததாகும். எந்ந ஒரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு மனம் ஒன்றி ஒருமுகப்பட்டுச் செயல்படும் திறன் தான் காரணம். ஒருமுகப்பட்டுச் செயல்படுவது பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். மனம் ஒன்றிச் செயல்படுவதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சாதாரணமாகப் பலரிடம் காண்கிறோம். கலை, இசை முதலியவற்றில் பெரும் சாதனை புரிவதற்கு ஒருமுகப்படும் ஆற்றல் காரணம். சிறந்த கலைப் படைப்பாளிகள், உயர்ந்த இசை விற்பன்னர்கள் ஆகியோரிடம் அந்த ஆற்றல் இருப்பதைப் பார்க்கிறோம். விலங்குகளுக்கு மிகச் சிறிய அளவுதன் ஒருமுகப்பட்டுச் செயல்படும் திறன் உண்டு. விலங்குகளுக்குப் பயற்சி அளித்தவர்களுக்கு இது நன்கு தெரியும். சொல்லித் தந்தவற்றை மிருகம் எளிதில் மறந்துவிடும். மனிதனுக்கு ஒருமுகப்பட்டுச் செயல்படும் ஆற்றல் அதிகம். மனிதருக்கு மனிதர் வித்தியாசப் படுவதற்கு இந்த ஆற்றலே காரணம்.

     எதை நாம் விரும்புகிறோமோ அதன்மேல் மனம் ஒன்றுவது இயல்பு. நீங்கள் விரும்பும் பொருள் பற்றி பேசினால் நீங்கள் நான் பேசுவதை ஊன்றிக் கவனிப்பீர்கள்.

     ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமா? அந்த ஆற்றலில் சிறந்து விளங்க முடியுமா? முடியும் என்கிறார்கள் யோகிகள். நம் மனதை நாம் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்கிறார்கள். ஒன்றில் ஒருமுகப்பட்டு விட்டால் அதை விட்டு விலக முடியாமல் போவதுண்டு. எனவே மனதை ஒன்றச் செய்வது போல விரும்பும்போது விலகச் செய்யவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு வகை ஆற்றலையும் ஒரே சமயத்தில் வளர்த்து கொள்வது நல்லது.

     என்னைப் பொறுத்தவரை கல்வியின் முக்கிய அம்சம் மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். பல விவரங்களை அறிவது அல்ல என்பேன்.
உலகத்தில் நாம் தெரிந்து கொண்டிருப்பதெல்லாம் ஒருமுகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுதான். எப்படித் தட்டுவது என்று தெரிந்திருந்தால் அப்படித் தட்டும்போது உலகம் பல ரகசியங்களைத் தெரிவிக்க தயாராயிருக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு அளவே இல்லை. ஒருமுகப்படுத்தும் சக்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மனத்தின் ஆற்றல் அதிகமாயிருக்கும்.

     ஒருபுறம் நவீன இந்தியா சொல்கிறது: “நாம் மேற்க்கத்திய கருத்துக்களையும், மொழிகளையும், உணவையும், உடையையும், நடை பாவனைகளையும் மேற்கொண்டால் தான் நாம் வலுவடைந்து மேற்கத்திய நாடுகள்போல் உலகில் வல்லமையுடைய நாடாக ஆக முடியும்”. ஆனால் மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது: “முட்டாள். மற்றவர் கருத்துக்களைக் காப்பி அடிப்பதால் அவை உம்முடையதாக ஆகிவிடாது. நீயாக உண்டக்கியவை, உன் சொந்தமானதாக இருக்கும். சிங்கத்தின் தோல் போர்த்திய கழுதை சிங்கமாக ஆகிவிடுமா?”

     மதத்தின் அடிப்படை நோக்கம் மனிதனுக்கு அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்துவதாகும். இந்த ஜென்மத்தின் துன்பத்தை அனுபவித்தால் அடுத்த ஜென்மத்தில் சுகமான வாழ்க்கை அமையும் என்று நம்புவது விவேகமன்று. இந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் முக்கியம். நடப்பு வாழ்வில் ஆனந்தம் கொணர்வதுதான் உண்மையான மதம்.

     நாம் இப்போதிருக்கிற நிலைமைக்கு நாம்தான் பொறுப்பு. எப்படி ஆகவேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி ஆகச் செய்யும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. நாம் இப்போதிருக்கிறா நிலைமை நம்முடைய முந்தைய செயல்களின் விளைவு என்றால், வருங்காலத்தில் எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறபடி ஆவதற்கு நம்முடைய இப்போதைய செயல்கள் அதை உண்டாக்க வேண்டும் என்று ஆகிறது. எனவே எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

     பொதுவாக மனிதன் தன் கஷ்டங்களுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்வான். இல்லையென்றால் கடவுளைக் காரணம் சொல்வான். அல்லது, ஒரு பேயை உருவக்கிக்கொண்டு விதி என்னும் அந்தப் பேய்தான் காரணம் என்பான். விதி என்பது எங்கே இருக்கிறது? விதி என்பது யார்? நாம் விதைத்ததை நாம் அறுக்கிறோம். நம் சொந்த விதியை உண்டாக்குவது நாமேதான். மற்ற யாரும் புகழ்ப்படவும் இடமில்லை. காற்று வீசுகிறது. பாய்மரக் கப்பலில் பாயை விரித்து வைத்தால் கப்பல் நகர்ந்து போகும். பாயைச் சுருட்டி வைத்திருக்கும் கப்பலுக்குக் காற்று பயன்படாது. இதில் காற்றின் குற்றம் எங்கே இருக்கிறது.

     கோழையும் முட்டாளும் தாம் இது விதி, இதற்கு விதி காரணம் என்று சொல்வார்கள் என்று கூறுகிறது ஒரு சமஸ்கிருதப் பழமொழி. வலுவான மனிதன்தான் நிமிர்ந்து நின்று ‘என் விதியை நான் தீர்மானிக்கிறேன்’ என்பான்.

     போய் எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்; “எழு, விழி. இன்னும் தூங்கிக் கொண்டிராதே, அல்லல்களை அகற்றவும் தேவைகளை அடையவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் ஆற்றல் இருக்கிறது. இதை நீங்கள் நம்பினால் அந்த ஆற்றல் வெளிப்படும்”. எல்லையற்ற ஆற்றல், அளவற்ற அறிவு, தளர்வுறாத சக்தி எல்லாம் உங்களிடம் இருக்கின்றன என்று நினைத்து அவற்றை வெளிக் கொணர முடியுமானால், நீங்கள் வெற்றிகரமாக விளங்குவீர்கள்.

     தன்னடத்தை உருவாகவும், மனவலிமை பெருகவும், அறிவு விருத்தி அடையவும், தன் சொந்த காலில் நிற்க வைக்கவும் செய்கிற கல்விதான் வேண்டும்.

     என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களில் ஒன்று, எந்த குறிக்கோளை அடைவதற்காக முயலும்போதும் மேற்கொள்ளும் வழி அல்லது செய்முறை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்பது. அடைய வேண்டியதைப் பற்றி எடுத்துக்கொள்ளும் அக்கறைக்குச் சமமான அக்கறை அடைவதற்கான வழி பொறுத்தும் எடுத்துக் கொள்ளவேண்டும். எப்படியாவது லட்சியத்தை அடைவது என்பது கூடாது. எடுத்துக் கொள்ளும் வழிமுறையும் முறையானதாக, சிறப்பானதாக இருத்தல் வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது அநேக பாடங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். வெற்றிக்கான ரகசியம் எல்லாம் இந்தக் கொள்கையில் இருக்கிறது. அடைய வேண்டியதைப் பற்றிச் செலுத்தும் கவனம் அதை அடைவதற்கான வழியைக் கையாளுவதிலும் இருத்தல் வேண்டும் என்னும் பாடத்தை மறத்தலாகாது.

     கடுமையாக ஆய்ந்தபின் நான் புரிந்துகொண்ட பேருண்மை இதுதான். ஒவ்வொரு ஜீவனிலும் கடவுள் இருக்கிறார். அந்தக் கடவுள்தான் எங்கும் இருக்கிறார். அந்தக் கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது. ஜீவனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.

செயல் பொறுத்த இரகசியம்:

     ஒரு செயலைச் செய்து அது வெற்றி பெறாமல் தோல்வியைச் சந்திக்க நேரும்போது ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதம் கையாண்ட வழிமுறையில் கவனம் செலுத்தாததுதான் என்பது தெரியவரும். காரணமே காரியத்தை உண்டாக்குகிறது என்பதை மறந்ததால் தோல்வி ஏற்பட்டது. சரியான, ஒழுங்கான, வலுவான வழியைக் கையாண்டிருந்தால் தோல்வி ஏற்பட்டிராது. குறிக்கோளை அடைதல் காரியம். அடைவதற்கு கையாளும் வழி காரணம். காரணம் சரியாக இருந்தால் காரியம் நிறைவேறும். காரணத்தில் அதாவது கைக் கொள்ளும் வழிமுறையில் அல்லது செய்முறையில் கவனத்துடன் இருப்பது அவசியம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ரகசியம்.

     பகவத்கீதை என்ன சொல்கிறது? நமது முழு ஆற்றலுடன் இடைவிடாது செயலாற்ற வேண்டும் என்று கீதை சொல்கிறது. நாம் செய்கிற செயல் எதுவாயினும், அதில் நமது முழு மனத்தையும் செலுத்த வேண்டும். வேறு எந்தக் காரணத்தினாலும் மனம் செயல்புரிவதிலிருந்து விலகிச் செல்ல இடம் தரக்கூடாது.

     உண்மையான வெற்றியின் இரகசியம் இதுதான். பிரதிபலனை எதிர்பாராமல் இருப்பது. பிரதிபலனை எதிர்பாராதவன் முற்றிலும் தன்னலமற்றவன். அப்படிப்பட்டவனே எல்லாவற்றிலும் வெற்றி பெறுவான். சிறந்த வெற்றி அடைவான். ஆனால் நாம் சாதரணமாக காண்பது என்ன? தன்னலமற்றவன் வாழ்க்கையில் ஏமாற்றப் படுவதையே காண்கிறோம். மனம் வருந்த நேரிடுவதைப் பார்க்கிறோம். தன்னலம் சிறிதுமற்ற இயேசு கிறிஸ்துவே சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவரது சுயநலமின்மையே மாபெரும் வெற்றிக்குக் காரணமாயிருந்தது என்பதை உணர்கிறோம். அந்த சுயநலமின்மை கோடிக் கணக்கானவர்களின் வெற்றிக்கு ஆசி வழங்கியது என்பதை அறிகிறோம்.

     வாழ்வில் துன்பத்துக்கும் தோல்விக்கும் காரணம் பற்றில் சிக்கிக் கொள்வதுதான். கீதை சொல்வதைக் கவனிக்க வேண்டும். “இடைவிடாது வேலை செய். வேலை செய்துகொண்டே இரு. ஆனால் பற்று வைத்துப் பற்றில் சிக்கிக் கொள்ளாதே” என்கிறது. ஒவ்வொன்றிலிருந்தும் உன்னைப் பிரித்துக் கொள்வதற்கான திறமை உன்னிடம் இருத்தல் அவசியம். ஒன்றின்மீது முழு ஆற்றலுடன் பற்று செலுத்துபவன், அதிலிருந்நு தன்னை முழுவதுமாக அகற்றிக் கொள்ளும் திறனுடையவனாயிருப்பின் அவன் இயற்கையிலிருந்து மிகச் சிறந்ததைப் பெறக்கூடியவனாக இருப்பான். பற்றிக் கொள்ளும் திறமையின் அளவுக்கு, விட்டு விலகும் திறமையும் இருத்தல் வேண்டும்.

     நோய் என்பது நோய்க் கிருமிகளை மட்டும் பொறுத்தது அன்று. நம் உடலில் நிலவுகின்ற ஓர் அனுகூல நிலைதான் நோய்க்கிருமிகள் தாக்க இடமளிக்கிறது. இதை உணராமல் நோய்க் கிருமிகளின் மீது பழி போடுகிறோம்.

     பொதுவாக, எதற்கும் வெளியே உள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்துவது நமது இயற்கையாக இருக்கிறது. பிறரைச் சபிக்கிறோம். உண்மையில் நம்முடைய தகுதிக்கு ஏற்றதைத்தான் நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது. நாம் மட்டும் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டால் அது பொய்யல்லவா? நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய். எனவே பிறரைச் சபிக்காமலும், பிறர்மீது பழி சுமத்தாமலும் இருங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். எதையும் எதிர்கொள்ளுங்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி அடையுங்கள்.

தமிழ் இணைய நூலகம்

     நம் முன்னோர்கள் எவ்வளவு வீரம், செறிவு, கலை நுனுக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை சரித்திர பின்னனியோடு அறிய வேண்டியது மிக மிக அவசியம்.  அப்படி அமரர் கல்கி எழுதிய அமர காவியமான, 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற வரலாற்று புதினங்களை வாசிக்கும் போது,  நாமும் அப்போது வாழ்ந்திருக்க கூடாதா என்ற ஆசைகள் கூட எழும்.  வாசித்து எத்தனை நாட்கள் ஆயினும் சரி, அந்த கதாபாத்திரங்களும், ஒவ்வொரு வரிகளும் என்றும் நம் கண் முன்னே நினைவில் நிற்கும்.   
     'பொன்னியின் செல்வன்' காவியத்தில் ராஜராஜசோழர் பிறந்தது முதல் அவர் அரியணையில் ஏறியது வரை நடநதவற்றை நன்றாக படைத்திருப்பார் அமரர்.  அதில் வரும் இந்த பாடலை யாரும் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

     இந்த புதினத்தில் பூங்குழலி பாடுவதாக அமைந்த இந்த பாடலும் என்றும் முடியாத வரிகள்.  இதில் வரும் ஒவ்வொரு உவமைகளுமே  முத்துக்கள் தான்.   
     மற்றொரு வரலாற்று புதினமான 'சிவகாமியின் சபதம்' பல்லவர்களின் பொற்காலமான மகேந்திரவர் மற்றும் நரசிம்மவர்மர் ஆட்சியில் நடந்தது பற்றியது.
      ஓர் இணையத்தில் அமரர் எழுதிய 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்'உட்பட பிற நூலகளும் மற்றும் பல தமிழ் நூல்கள்  இலவசமாக வாசிக்க கிடைப்பதை அண்மையில் அறிந்தேன்.  இந்த இணையத்தில் கல்கி, பாரதியார், பாரதிதாசன், சாவி, விவேகனானந்தர், அண்ணா, புதுமைப்பித்தன் மற்றும் பலர் எழுதிய நூல்களும்,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,ஐம்பெரும்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் மற்றும் பல பைந்தமிழ் காப்பியங்களும் வாசிக்க கிடைக்கிறது.  ஒவ்வொரு தமிழ் ஆர்வலரும் விரும்பும் இணையதளமாக இது இருக்கும். 
     இந்த இணையதளத்தை கண்டிப்பாக உங்கள் BOOKMARK-ஆக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.  நிச்சயமாக பயன்படும்.  இந்த இணையதளத்திற்கு செல்ல, இந்த சுட்டியை சொடுக்குங்கள் http://www.chennailibrary.com/  நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து மகிழுங்கள்.

உலக முதல் பல்கலைக்கழகம்

     உலகத்துக்கே அறிவொளி வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நளந்தா பல்கலைக்கழகம்.  நளந்தா என்றால், 'குறைவற்ற கொடை' என்று அர்த்தம்.  கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்த பல்கலை, பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது.  உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, நளந்தா இருந்துள்ளது.


     இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரிய பேரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு.,415-455ல் இருந்த சக்ரா தித்யா என்ற குமார்குப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
     அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைகழகத்தை மெருக்கேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன.  ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராழ்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது.  அந்த காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்த மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர்.  சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன.  ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
      ஒட்டு மொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது.  நான்கு நுழைவுவாயில்கள் இருந்தன. உள்ளே 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன.  எல்லாமே செங்கல் சுவர்கள் தான்.  செங்கல்தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் ப்ருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன.
     'தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது.  பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன.  அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்கியம், யோக சாஸ்த்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன.       சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மயான் சரித்திச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைவ் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு.,1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.   அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. 
     அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை, நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.  மொத்த திட்டச் செலவு 500 கோடி ரூபாய்.  அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசத்களுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது.  இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.  
     ராஜ்கீர் செல்லும் வழியில் பில்கி-மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது.  பல்கலைக்கழக் திட்ட குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம்.  சீனாவின் கைங்கர்யம்.          'ஒபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு..  'பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!                                  source: தினமலர் நாளிதழ்

எங்கே செல்லும் இந்த பாதை

    சமீபத்தில் லஞ்சத்தை ஒழிக்க உச்ச நீதி மன்ற நீதிபதி  ஒரு வழி கூறி இருக்கிறார். அவர் கூரியதாவது, 'அரசு துறைகளில் தற்போது பணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை'.  குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி துறைகளில் லஞ்ச நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன.  எனவே,  'அரசு அலுவகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயிக்கலாம்', 'அதை சட்டமும் ஆக்கலாம்' என்பதே லஞ்சத்தை ஒழிக்க அவர் கூரியவழி.  மேலும் அவர் கூரியதாவது, இதன் மூலம் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வர்.  அதிகாரிகளிடம் பேரம் பேச வேண்டிய தேவையே இல்லையே. அரசு அதிகாரிகள் ஏழையாக உள்ளனர்.  அவர்களை குறை கூறக் கூடாது. ஏனென்றால், பணவீக்கம் அதிகரித்து விட்டது என்று அவர் கூறி இருக்கிறார்.
     இப்படி ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறி இருப்பது, சற்று வியப்பாக தான் இருக்கிறது. மற்ற நாடுகளில் வேலை செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்குகின்றனர்.  அனால் நமது நாட்டிலோ வேலை செய்வதற்கே லஞ்சம் என்ற பெயரில் பிச்சை வாங்குகின்றனர்.  அவர்கள் வேலை செயவதற்கு தான் மாதா மாதம் சம்பளம் வாங்குகின்றரே, பின்பு எதற்கு இந்த சட்டம் ஆக்கப்பட வேண்டிய 'லஞ்சத் தொகை நிர்ணயம் செய்யும் வழி.

     இப்படி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழக அரசுக்கே அதிக வருவது இதனால் தான்.  அது தான் 'டாஸ்மாக்'.  இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..? சுமார் 'பதினான்கு ஆயிரம் கோடி(14,000 கோடி).  இங்கேயும் ஒரு குளறுபடி நடக்கிறது. ஒவ்வொரு சரக்குக்கும் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிமகன்களிடம் வசூல் செய்து(குளிர்ச்சிக்கு என்று கூறி), டாஸ்மாக் கடைகாரர்களின் பையில் போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மொத்தமாய் கிடைக்கும் வருவாயே கோடி கணக்காம்.   
     முன்னர் அண்ணா ஆட்சியில் இருந்த போது மதுக்கடையை அரசு எற்று நடத்தினால் அரசுக்கு நிறைய வருவாய் கிடைக்கும் என்று கலைஞர் கூறினாராம். அண்ணா அதற்கு 'விழியை இழந்து சித்திரம் வாங்குவதா?', அப்படி வரும் வருமானம் தேவையே இல்லை என்று அவர் கூறினாராம்.  ஆனால் என்று, அரசு நடப்பதே மணல் மூலமூம் டாஸ்மாக் மூலமும் தான் என்றால் பாருங்கள்.  எங்கே செல்கிறது நமது நாடு என்று பாருங்கள்.

Thursday, October 14, 2010

தமிழ் மொழியில் MOBILE PHONE-ல் SMS-களை படிக்க

     நண்பர் தமிழ் மொழில் SMS அனுப்பி இருப்பார்.  அதை திறந்து பார்க்கையில் பெட்டி பெட்டியாக DISPLAY ஆகும்.  ஏனென்றால் நம்ம மொபைல்ல(சில மொபைல்களில்)  தமிழ் SMS சப்போர்ட் பண்ணாது.  அதற்காக இணையதளத்தில் தேடுகையில் ஒரு JAVA APPLICATION கிடைத்தது.  அதன் பெயர் INDI SMS.  இது தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலயாளம், கன்னடம், பெங்காளி, குஜராதி, மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளை SUPPORT செய்கிறது.


     இதை பதிவிறக்க http://www.getjar.com/mobile/18661/indisms-for-nokia-n70/ LINK-க்கு செல்லவும்.  இது என்னுடைய மொபைலில் (NOKIA N70) WORK செய்கிறது.  எல்லா NOKIA  மொபைல்களிலும் வேலை செய்யும் என நினைக்கிறேன்.  மற்ற மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறதா என்று பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லவும்.
   
     இதன் மூலமாக நமது INBOX-யையும் MANAGE செய்யாலாம்.  வந்த SMS-க்கு அத்ன் மூலமாகவே மறுபடியும் தமிழ் மொழியில் பதிலும் அனுப்பலாம் என்பது அதன் சிறப்பு.  இதை நிறுவிய உடன், REGISTER செய்ய ஒரு வேண்டும், பிறகு தான் பயன் படுத்த முடியும்.
  
     இதன் ஒரே குறை, பதில் அனுப்பும் போது சில  தமிழ் எழுத்துக்களை TYPE செய்ய OPTION-கள் சரியாக கொடுக்கப் படவில்லை.  மற்றபடி நன்றாக SMS-களை இந்திய மொழி SMS-களை படிக்கிறது. கண்டிப்பாக பயன்படுத்தி பார்க்கவும்.