இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
காடுகளுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், எப்போது போகலாம், அங்கே செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்களை பற்றி, அண்மையில் தினமலர் நாளிதழில் படித்தேன். அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எப்போது போகலாம்:
கோடைக்காலம் தான் பயணம் போக உகந்த காலம். மழை காலத்தில் செடி, கொடிகள், மரங்கள் தழைத்து வளர்ந்து நிற்கும் என்பதால், மிருகங்கள் நாம் அவ்வளவு சுலபமாக பார்த்து விட முடியாது. ஆனால், கோடை காலத்தில் மிருகங்கள் நம் பார்வைக்கு மிக சுலபமாக அகப்படும். சூரிய உதயத்தின் போது, அஸ்தமனத்தின் போது விலங்குகள் இரைதேட கிளம்பும் காட்சி அவ்வளவு அழகானது.
காடு பயணத்தின் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:
- மரங்களின் அடர்த்தி அதிகம் என்பதால், புழுக்கம், அதிகமாக இருக்கும், பருத்தி உடைகள் பயணத்திற்கு ஏற்றது.
- கறுப்பு, சாம்பல், பச்சை நிற உடைகள் நல்லது. வெள்ளை மற்றும் ஊத நிற உடைகள் விலங்குகளை கவர்ந்திழுக்கும் என்பதால் இந்த நிறங்களை தவிர்த்து விடுவது நல்லது.
- தொப்பி மற்றும் தரமான ஷுக்கள் அவசியம்.
- வனத்துறை உதவியுடன் நல்ல வழிகாட்டியை துணைக்கு அழைத்துச் செல்வது நலம்.
காட்டு பயணத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள்:
- புகை பிடிக்க கூடாது.
- வாகனங்களின் பயணம் செய்யும்போது தேவையில்லாத ஹாரன் வேண்டாம்.
- வாகனங்களை வனச்சாலையின் ஓரம் நிறுத்தி இறங்கி நிற்பது ஆபத்தானது.
- எந்த சூழலிலும் இன்ஜினை அணைத்துவிட வேண்டாம்.
- மொபைல் சப்தம், அதிகமான பாட்டு சப்தம் மிருகங்களை எரிச்சல் பட வைக்கும். நாம் அவர்களின் வீட்டு விருந்தாளிகள் என்பதை நினைவு கொள்ள வேண்டியது.
கான்க்ரீட் காட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி அலுத்துப் போச்சுனு நினைக்கறவங்க, அப்படியே பசுமைக் காட்டுக்கு போய் வாங்க.
2 கருத்துக்கள்:
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
good job dude,keep posting
Post a Comment