Saturday, December 18, 2010

மனித மூளையின் அதிசயங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     நமது மூளை வேலை செய்யும் விதமே பெரிய அதிசயம் தான்.  அதைப்பற்றி இந்த பதிவில் சிறிய விடயங்களை பார்ப்போம்.   

     மூளை என்பது செல்களால் ஆனது.  செரிப்ரல் ஃப்லூயிட்(cerebral fluid) என்கிற திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு செல்லும் நியூரான் எனப்படுகிறது.  நியூரானில் தான் தகவல்கள் பதிவு செய்யப்படுகிறது.

     நமது இடது பக்க மூளை வலது புற உறுப்புக்களை(வலது புற கை, கால், கண், காது) கட்டுப்படுத்துகிறது.  நமது வலது பக்க மூளை இடது புற உறுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
     இடது புற மூளையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் கணிதம், அறிவியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர்.  பெரும்பாலும் இவர்கள் விஞ்ஞானிகளாக இருப்பர்.
    வலது புற மூளையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் கற்பனைத் திறன் மிக்கவர்களாக இருப்பர்.  பெரும்பாலும் இவர்கள் கவிஞர்கள், ஓவியர்கள், இசையமைப்பாளர்கள், கதாசிரியர்களாக இருப்பர்.

0 கருத்துக்கள்:

Post a Comment